கொடைரோடு: பள்ளப்பட்டியில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு முத்தாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. முதல் நாளில் சிறு மலையை நோக்கி மழை பொங்கல் வைக்கும் நிகழ்வுடன் விழா துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் பக்தர்கள் தீச்சட்டி, மாவிளக்கு, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மூன்றாம் நாளில் அம்பிகையை ஊஞ்சல் காட்சி, முத்தாலம்மன் ஊர்வலம் நடந்தது. இதோடு ராமர், லட்சுமணர், சீதை வேடமிட்ட வண்டி வேஷம், பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்வலமாக சென்றனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முத்தாலம்மன் பெண் தெய்வம் என்பதால் பெரும்பாலும் வேண்டுதல் நிறைவேறிய ஆண்கள், பெண்கள் வேஷத்துடன் ஊர்வலம் சென்று நேர்த்திக்கடன் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.