மேலூர்: மேலுார், சாத்தமங்கலத்தில் உள்ள ஹரிஹர புத்திர அய்யணார் கோவில் வைகாசி மாத திருவிழா நேற்று துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவில், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், எல்லா வளமும் கிடைக்க வேண்டி கொண்ட பக்தர்கள் நேற்று இ.மலம்பட்டி குதிரை பொட்டலில் இருந்து புரவிகள், சப்தகன்னிகள், அம்மன் உள்ளிட்ட சிலைகளை 17 கி.மீ., துாரத்தில் உள்ள சாத்தமங்கலம் மந்தைக்கு சுமந்து சென்றனர். இன்று(ஜூன் 14) மந்தையில் இருந்து புரவிகள் சின்ன, பெரிய அய்யணார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பொங்கல் வைக்கப்படும். இவ் விழாவில் சாத்தமங்கலம் மற்றும் மேலுார் பகுதிகளை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.