மானாமதுரை : மானாமதுரை அருகே தஞ்சாக்கூரில் உள்ள பாலசுப்பிரமணியர் கோயிலில் வைகாசி விசாக விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் துவங்கியது.தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தன.
வைகாசி விசாக விழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து நேர்த்தி செலுத்தினர். பாலசுப்பிரமணியருக்கு 11 வகை பொருளால் அபிஷேகம் செய்தனர். கோயில் முன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். தஞ்சாக்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டை கோயில் டிரஸ்டி பாலசுப்ரமணியன் செய்தார்.