காரைக்கால்: காரைக்காலில் சீதளாதேவியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது. காரைக்கால் கீழகாசாகுடி பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சீதளாதேவியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.இந்தாண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த 3ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று தீமிதி திருவிழாவையொட்டி சீதளாதேவிக்கு பல்வேறு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பின்னர் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.இதில் ஏராளமாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.