மேலூர்: மேலுார் துரோபதையம்மன் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மே 20 கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. மே 27 ல் திருக்கல்யாணமும், ஜூன் 14 நேற்று நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற மேலுார் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டேர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று (ஜூன் 15) மஞ்சள் நீராட்டுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.