பதிவு செய்த நாள்
15
ஜூன்
2022
05:06
மேட்டுப்பாளையம்: பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலின், ராஜகோபுர திருப்பணிகள் விரைவில் துவங்க வேண்டி, 108 சங்கு பூஜைகள் செய்யப்பட்டன. சிறுமுகை அருகே எலகம்பாளையத்தில், மிகவும் பழைமையான, பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் ராஜகோபுர திருப்பணிகள், நடைபெற்று வருகின்றன. இதுவரை, 17 அடிக்கு அஸ்திவாரம் போடப்பட்டுள்ளது. மேலும், 63 அடி உயரத்திற்கு, 5 நிலை ராஜகோபுரம் கட்டப்பட உள்ளது. பக்தர்கள் வழங்கும் நன்கொடையில், ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளன. இப்பணியானது விரைவில் துவங்க வேண்டி, கோவில் நிர்வாகிகள், 108 சங்கு பூஜை செய்தனர். அன்னூர் சிவாச்சாரியார் குருமூர்த்தி சிவம், சங்கு பூஜை செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, திருப்பணி குழு நிர்வாகிகள் தேவராஜ், சுதாகர், சிவகுமார், கஜேந்திரன், பாலு, ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.