Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை 3 ... சந்திரசேகரேந்திரரின் 128வது ஜெயந்தி விழா சந்திரசேகரேந்திரரின் 128வது ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் சுவாமி சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பகோணம் சுவாமி சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2022
03:06

சென்னை : கும்பகோணத்தில், 60 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட சுவாமி சிலைகள், அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சிவபுரம் கிராமத்தில் உள்ள, சிவகுருநாதசுவாமி கோவிலில் இருந்த தொன்மையான பல உற்சவர் சிலைகள் கடத்தப்பட்டதாக, அப்பகுதியை சேர்ந்த நாராயணசாமி புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு தலைவர் தினகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விசாரணையை துவங்கினர். விசாரணையில் கோவிலில் இருந்த சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது தெரிய வந்தது. கோவிலில் இருந்த சிலைகளின் புகைப்படங்களை பெற்று, பிரெஞ்ச் இன்ஸ்டியூட் ஆப் பாண்டிச்சேரியிடம் இருந்து பெற்ற புகைப்படங்களோடு ஒப்பீடு செய்யப்பட்டது. இந்த சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாம் என, இணையதளத்தில் ஆய்வு செய்ததில், அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில், சோமாஸ்கந்தர், தனி அம்மன் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அச்சிலைகளை சட்ட ரீதியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில் நூறாண்டுகளுக்குப் பின்பு உச்சநீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பணிகளை செய்தவர்கள் பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழு ஆகும். 6 பேர் ... மேலும்
 
temple news
பல்லடம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் முருகப்பெருமானின் அருளால், பக்தர்களின் நீண்டகால எண்ணம் ... மேலும்
 
temple news
வாரணாசி: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar