பதிவு செய்த நாள்
16
ஜூன்
2022
03:06
சென்னை: காஞ்சி காமகோடி பீடத்தின், 68வது மடாதிபதியான சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 128வது ஜெயந்தி விழா, புதுடில்லி தேவி காமாட்சி கோவிலில் விமரிசையாக நடந்தது. புதுடில்லியில் ஸ்ரீதேவிகாமாட்சி கோவில் அமைந்துள்ளது. கோவிலில், காமகோடி காமாட்சி மெடிடேஷன் மற்றும் கல்சுரல் மையம் இயங்கி வருகிறது.அதன் சார்பில், காஞ்சி மடத்தின் 68வது பீடாதிபதியான மஹாபெரியவர் எனும் சந்திரசேகரேந்திரசரஸ்வதி சுவாமிகளின், 128வது ஜெயந்தி விழா நேற்று முன்தினம் நடந்தது.அன்று காலை 8:00 மணி முதல் மகன்யாச பூர்வாக ஏகதேச ருத்ர ஜபம், அபிஷேகம், திரிசக்தி அர்ச்சனை மற்றும் ஆரத்தி நடந்தது. மாலை 5:00 மணிக்கு நவாவர்ண பூஜை, அதை தொடர்ந்து, பாதுகா பூஜா, வேத, உபநிஷத் பாராயணம், பிரஹார உற்சவம், ஆரத்தி நடந்தது. முன்னதாக, 10ம் தேதி அச்சித்ரா அஸ்வமேத பாராயணம் நடந்தது. வரும், 17ம் தேதி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கணபதி ஹோமம், விக்னேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.