திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று முன்தினம் இரவு இடி தாக்கியதில் மாரியம்மன் கோயில் கோபுரம் சேதமடைந்தது பக்தர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.திருப்புவனம் புதூரில் எல்லை காவல் தெய்வமான ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் ஆலயத்தில் நேற்று முன்தினம்இரவு காற்றுடன் கூடிய கனமழையின் போது இடிதாக்கியதில் ராஜகோபுரத்தின் கிழக்கு பகுதி சேதமடைந்தது. கடந்த 2016ல் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ராஜகோபுரம் சேதமடைந்ததால் பக்தர்கள் வேதனையடைந்தனர்.