ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் மேலவலசை மஞ்சக்குளத்து காளியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு மஞ்சக்குளத்து காளியம்மன், தர்ம முனீஸ்வரர்,கருப்பண்ணசுவாமி, ராக்காச்சியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, கணபதி ஹோமம், பூர்ணாஹூதி ஆகியவை நடந்தன. பூஜாரி நாகநாதன் பூஜைகளை செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றியுள்ள கிராமத்தினர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்தனர்.