பதிவு செய்த நாள்
17
ஜூன்
2022
06:06
அவிநாசி: ஸ்ரீ செல்வவிநாயகர்,ஸ்ரீ மாகாளியம்மன்,ஸ்ரீ கருப்பராயர் உள்ளிட்ட மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ செல்வவிநாயகர்,ஸ்ரீ மாகாளியம்மன்,ஸ்ரீ கருப்பராயர் உள்ளிட்ட மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், வெகு விமர்சையாக நடைபெற்றது . அவிநாசி வட்டம், ஆட்டையாம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வவிநாயகர்,ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ கருப்பராயர் மூர்த்திகளுக்கு, திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா, இன்று காலை நான்காம் கால யாக பூஜைகளுடன் நடைபெற்றது. இதனையடுத்து, தசதானம், தசதரிசனம், உபசார பூஜைகள் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிசேக விழாவில் சுற்றுப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.