பதிவு செய்த நாள்
17
ஜூன்
2022
06:06
கோவில்பாளையம்: ஆறுவசெட்டி புதூர், சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 19ம் தேதி நடக்கிறது. கொண்டையம் பாளையம் ஊராட்சி, ஆறுவ செட்டிபுதூரில், பழமையான சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம் ஆகியவற்றில் திருப்பணி செய்யப்பட்டு, புதிதாக நவக்கிரக சன்னதி அமைக்கப்பட்டு, கோவில் முழுமையாக வர்ணம் தீட்டப்பட்டு, திருப்பணி செய்யப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலையில் மாரியம்மன் கோவிலில் இருந்து, புனித தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் முதல் கால பூஜை நடக்கிறது. 18ம் தேதி காலையில், இரண்டாம் கால வேள்வி பூஜையும், பால்குடம் எடுத்து வருதலும், மதியம் விமான கோபுர கலசம் பிரதிஷ்டை செய்தலும், இரவு மூன்றாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. வரும் 19ம் தேதி காலை 7:00 மணிக்கு விமானம் மற்றும் மூலாலயத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து, மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் கோதண்ட ராமர் குழுவின் பஜனை நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.