புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சவுடாம்பிகை அம்மன் கோவிலில் அம்மன் பண்டிகையை முன்னிட்டு கத்திபோடும் உற்சவம் நேற்றுநடந்தது. முத்தியால்பேட்டை, காந்தி வீதியில் ஆதிவிநாயக வீரபத்திர சவுடாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, அம்மன் பண்டிகை நேற்று முன்தினம் காலை கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஆதிவிநாயகர், சவுடாம்பிகை மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு மகா அபிேஷகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்று மாலை துவஜஸ்தம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது.இரண்டாம் நாளான நேற்று காலை அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மார்பில் வாள் தாங்கி, சக்தி வழிபாடு மற்றும் கரக வீதியுலா நடந்தது. மதியம், சவுடாம்பிகை அம்மன் அலகு பானையில் கங்கை நீர் கொண்டு வந்து, அம்மன் அலகுக்கு அபிேஷகம் செய்து, அலகு நிறுத்தப்பட்டது.தொடர்ந்துஜோதி வழிபாடு,சவுடாம்பிகை அம்மனுடன் மகா ஜோதி வீதியுலா நடந்தது. மூன்றாம் நாளான இன்று மாலை ஊஞ்சல் உற்சவமும், தொடர்ந்து கொடி இறக்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.