திண்டுக்கல் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2022 10:06
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் நாயகர், மொச்சக்கொட்டை விநாயகர், ரயிலடி சித்தி விநாயகர், ரவுண்ட் ரோடு கணபதி, நேருஜி நகர் நவசக்தி விநாயகர், சத்திரம் தெரு, கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நன்மை தரும் 108 விநாயகர் கோயிலில் தங்க தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது. பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்து. சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. கன்னிவாடி டத்து விநாயகர் கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி யில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.