முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே ஒருவானேந்தல் கிராமத்தில் கருப்பணசாமி கோயில் ஐந்தாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. கணபதிஹோமம் தொடங்கி சிறப்புபூஜை நடந்தது. பின்பு கருப்பண சாமிக்கு 17 வகையான அபிஷேகங்கள் மற்றும் சிறப்புதீபாராதனை நடந்தது. கிராமமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.