பாலமேடு: பாலமேடு அருகே ராமக்கவுண்டன்பட்டி மாரியம்மன் கோயில் உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து பூ அலங்கார கரகத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். முளைப்பாரி ஊர்வலம், பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. வலையபட்டி ஊராட்சி தலைவர் காயத்ரி இதயச்சந்திரன் அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.