ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்தூர் அருகே ராதானூர் முத்தங்கோட்டை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர், விநாயகர் வாஸ்து சாந்தி பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகளும், கோமாதா பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றன. பின்பு யாகசாலையில், பூஜை செய்யப்பட்ட புனிதநீர் சிவாச்சாரியார்களால், கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.