சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட முறையூர் வடக்குவாசல் செல்லாயி அம்மன் கோயில் திருவிழா நேற்று தொடங்கியது. காலை 10:00 மணிக்கு பவளக்குழு பக்தர்கள் சார்பில் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு பெண்கள் பூத்தட்டு ஏந்திவந்து பூச்சொரிதல் செய்தனர். இன்று இரவு 9:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. ஒன்பது நாள் திருவிழாவாக தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. ஜூன் 28 தேதி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடக்கிறது.