பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருப்பணி தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2022 04:06
அவிநாசி: பத்ரகாளியம்மன், சித்தர் முத்துக்குமாரசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, திருப்பணி துவங்கியது. சேவூரில் அழகுநாச்சியம்மன் எனப் போற்றப்படும் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று ,11 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, திருப்பணிகள் தொடங்கப்பட்டது. இதையொட்டி, நேற்று மாலை திரவிய அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம், மகா தீபாரதனை நடைபெற்றது. சிறப்பு ஹோமம் நடைபெற்று, விநாயகர், பத்ரகாளியம்மன், சித்தர் முத்துக்குமாரசுவாமி பாலாலயம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.