பதிவு செய்த நாள்
21
ஜூன்
2022
05:06
சென்னை : ,நாகை மாவட்டம், வேதாரண்யம் கோவில் சொத்துக்களை மீட்க கோரிய வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், வேதாரண்யேஸ்வர சாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க கோரினேன். இதையடுத்து, சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டருக்கு, அரசு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. வேதாரண்யேஸ்வர சாமி கோவிலுக்கு, 28 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. அரசின் அனைத்து துறைகளும் அடங்கிய தனிக்குழு அமைத்தால் தான், இந்தச் சொத்துக்களை பாதுகாக்க முடியும்.எனவே, 28 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான சொத்துக்களை மீட்டு பாதுகாக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
வேதாரண்யம் கோவில் சொத்து அரசு பதில் அளிக்க உத்தரவு