அரியாங்குப்பம்: தானம்பாளையம் புட்டலாய் அம்மன் கோவில் மண்டல பூஜையில் முதல்வர் ரங்கசாமி தரிசனம் செய்தார். தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் புட்டலாய் அம்மன் கோவிலில் கடந்த 17ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்த மண்டல பூஜையில் முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.