திருச்சி : உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான வணிக வளாகம் மீட்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து கூறியுள்ளதாவது: சென்னை தங்க சாலையில் உள்ள திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்காதர் கோயிலுக்கு சொந்தமான 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிக வளாக கட்டிடத்தை செல்வ பெருமாள் என்பவர் ஆக்கிரமித்து இருந்தார்.ஹிந்து சமய அறநிலையத்துறை விதிமுறைப்படி, கோயில் சொத்தை பயன்படுத்தியதற்கான வாடகையோ, இழப்பீடு கட்டணமோ செலுத்தவில்லை. இது குறித்து பலமுறை அறிவுறுத்தல் செய்தும், கோயில் சொத்தை விட்டு வெளியேறவில்லை. இழப்பீடும் செலுத்தவில்லை. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 17 ம் தேதி ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து கோயில் சொத்து சுவாதீனம் எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.