பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டியில் 16 வீடு மும்முடியார் ராமகாரர் வம்சாவளியினருக்கு பாத்தியப்பட்ட நரசிங்கப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.விநாயகர், கிராம தேவதைகள் பூஜை, வாஸ்து சாந்தியுடன் முதல் கால யாக பூஜை துவங்கியது. இரண்டாம் கால யாக பூஜையில் காப்பு கட்டுதல், கணபதி, லட்சுமி ஹோமம், வேதபாராயணம் பாடப்பட்டது.திருப்பள்ளி எழுச்சி உடன் மூன்றாம் கால யாக பூஜை துவங்கி கோ பூஜை, கருடாழ்வார் வழிபாடு நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் கடம் புறப்பட புண்ணிய கலசங்களில் மங்கள இசை முழங்க, புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.