பழநி: பழநி, மலைக் கோயிலில் நேற்று உள்ளூர் பக்தர்களுக்கும் கோயில் ஊழியர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பக்தர்கள் மன உளைச்சல் அடைந்தனர்.
பழநி, மலைக்கோவிலில் செவ்வாய், கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் அதிகாலை விஸ்வரூப தரிசனத்திற்கு வருகை புரிவர். சிலர் தினமும் விஸ்வரூப தரிசனம் காண அதிகாலையிலேயே சுற்றுப்புற கிராமங்களில் இருந்து மலைக்கோயிலுக்கு படி ஏறி வருவர். அதிகாலையில் வெளியூர் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதற்கு முன் பக்தர்கள் வெளியேறும் வாசல் வழியாக கோவில் நிர்வாகம் தரிசனத்திற்கு அனுமதிக்கும். தற்போது கடந்த சில நாட்களாக அவ்வாறு அனுமதிக்காமல் கட்டுப்பாடுகளை கோயில் நிர்வாகம் விதித்திருந்தது. இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐம்பதிற்கும் மேற்பட்ட உள்ளூர் பக்தர்கள் வெளியேறும் பாதை வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்க கோரினர் இதனை அங்குள்ள கோயில் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர். இதனால் பக்தர்களுக்கும் கோயில் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோயில் கண்காணிப்பாளருக்கும் உள்ளூர் பக்தர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உள்ளூர் பக்தர்களுடன், ஹிந்து அமைப்பினர் இணைந்து கோயில் உத்தரவிற்கு எதிராக வெளியேறும் பாதைக்கு அருகில் நின்று போராட்டம் நடத்தினர். அங்கே இருந்த சிலர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பல ஆண்டுகளாக உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்து வந்த முறையை கோயில் நிர்வாகம் மாற்றியுள்ளது. பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறினர்.