வெள்ளகோவிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூன் 2022 05:06
வெள்ளகோவில்: வெள்ளகோவில் சோளீஸ்வரர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கால பைரவருக்கு ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பால், தயிர், நெய், என 16 திரவியங்கள் அடங்கிய அபிஷேகம் நடந்தது. அலங்கார அபிஷேகம் மஹா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.