மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில் பந்தக்கால் நடவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2022 04:06
மதுராந்தகம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவிலில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது. மதுராந்தகத்தில் புகழ்பெற்ற ஏரிகாத்த ராமர் என அழைக்கப்படும், கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா, அடுத்த மாதம் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு, கோவிலில் நேற்று பந்தக்கால் நடப்பட்டது.தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் விழாவில் காலை, மாலை என, பல்வேறு வாகனங்களில் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன் எழுந்தருளி, வீதியுலா வருவார். இதில் முக்கிய விழாக்களாக மூன்றாவது நாளன்று கருட சேவை, ஐந்தாவது நாளன்று நாச்சியார் திருக்கோலம், ஏழாவது நாளில் வெள்ளித் தேரில் ராமர் வீதி உலா வரும் நிகழ்வு நடக்கிறது. ஜூலை 13ல், தேரோட்டம் நடக்க உள்ளது.