வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தானில் பாண்டிமுனீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஜூன் 23ல் யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 2ம் கால பூஜையை தொடர்ந்து கோயில் கோபுரம், சக்தி பீடத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலய திருப்பணிக் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.