பதிவு செய்த நாள்
24
ஜூன்
2022
04:06
காஞ்சிபுரம்: உக்கம் பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், புதிதாக கட்டப்பட்ட தேவகுரு என அழைக்கப்படும் பிரகஸ்பதி குருபகவான் கோவிலில், வரும் 30ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் அடுத்த, உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு தனித்தனி சன்னிதி உள்ளது.இங்கு, தேவகுரு என அழைக்கப்படும் பிரகஸ்பதி குரு பகவான், தன் மனைவி தாரையுடன் தம்பதி சமேதராய், யானை வாகனத்தில் அமர்ந்திருப்பதுபோல சிலை நிறுவப்பட்டு, நுாதன விமானம் ஆகம விதிப்படி தனி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், வரும் 30ல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தையொட்டி, 29ல் காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்குகிறது. மாலை 4:00 மணிக்கு முதற்கால யாகசாலை பூஜை நடைபெறுகிறது.கும்பாபிஷேக தினமான 30ல் காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. தொடர்ந்து, 11:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.