கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் : தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2022 10:06
மயிலாடுதுறை: திருக்கடையூர் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் முன்னிலையில் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் பழமை வாய்ந்த கன்னியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தொடங்கி இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன காலையில் யாகசாலை பூஜைகள் முடிவடைந்து மகா பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புனித நீரைவிமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன இந்த கும்பாபிஷேக விழாவில் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்களும், அம்பாள் திரு உருவம் பொறிக்கப்பட்ட ஐம்பொன் டாலரும் பிரசாதமாக வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.