தச்சுவேலை நடக்கும் இடத்தில் பாம்பு ஒன்று நுழைந்தது. அப்போது அங்கு இருந்த ரம்பத்தின் மீது அதனுடைய நாக்கு பட்டதால், காயம் ஏற்பட்டது. அவ்வளவுதான் அதற்கு வந்ததே கோபம். ரம்பத்தை இறுக்க ஆரம்பித்தது. இதனால் அதற்கு கோபமும் கூடியது. ரத்தமும் வந்தது. இருந்தாலும் விடவில்லை. கோப வெறியில் மேலும் ரம்பத்தை இறுக்கியது. கடைசியில் அதன் உடல் இரு துண்டானது. இதைப்போலவே பலரும் கோபத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்கிறார்கள். பின்னர் வருந்துகிறார்கள். இதனால் உடல்நலம் மட்டுமல்ல, வாழ்க்கையும் கெடுகிறது. இது தேவைதானா...