பதிவு செய்த நாள்
28
ஜூன்
2022
10:06
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில், அஷ்டதிக்கு பலிபீடத்திற்கு பாலாலயம் நடந்தது. திருவண்ணாமைலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதி வலம் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் தீப திருவிழாவின்போது, மாடவீதியில், 10 நாட்களும், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். தேரோட்டமும் நடக்கும். இதற்காக மாடவீதியில், சாலையை மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்து, 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அதற்கான பணி நடந்து வருகிறது. இதனால், அந்த மாடவீதியில் சாலையோரம் அஷ்டதிக்குகளிலுள்ள எட்டு பலிபீடமும், சாலை அமைக்கும் பணியின்போது பாதிக்கப்படும் என்பதால், நேற்று அதற்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டு பாலாலயம் நடந்தது. சாலை பணிக்கு பின், எட்டு பலிபீடமும் அதே இடத்தில் பின்னர் அமைக்கப்பட உள்ளது.