பதிவு செய்த நாள்
28
ஜூன்
2022
10:06
காரைக்குடி: கோட்டையூர் ஊம குளவட ஐய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நேற்று நடந்தது. மழை வேண்டியும், விவசாயம் செழித்திடவும், திருமணம், குழந்தை உள்ளிட்ட பல்வேறு பல்வேறு நேர்த்திக்கடனுக்காக 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊம குளவட ஐய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா கோட்டையூர் நாட்டார்களால் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று புரவி எடுப்புத் திருவிழா நடந்தது. நேற்று காலை, கோட்டையூர் கோட்டை நாச்சியம்மன் கோயில் பொட்டல் பகுதிக்கு புரவி கொண்டுவரப்பட்டது. அங்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, யானை, குதிரை, காளை, உள்ளிட்ட சிலைகளை மக்கள் கோட்டையூர், ஸ்ரீராம்நகர், கல்லூரிச் சாலை வழியாக கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.