பதிவு செய்த நாள்
29
ஜூன்
2022
05:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாகும் வகையில், வளர்ந்து வரும் செடியை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரம் - உத்திர மேரூர் சாலை, ஆலடி பிள்ளையார் கோவில் அருகில், பணாமுடீஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இக்கோவிலுக்கு சோமவாரம், பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, மாத சிவராத்திரி, மஹாசிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் இக்கோவிலுக்கு அதிகளவு பக்தர்கள் வந்து செல்கின்னறர். இக்கோவில் ராஜகோபுரத்தின் உச்சியில் அரச மர செடி ஒன்று வளர்ந்து வருகிறது. செடி வேரூன்றி வளர்வதால், கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமாகும் அபாயம் உள்ளது. செடியாக இருக்கும்போதே அகற்றா விட்டால், செடி வளர்ந்து மரமானால், ராஜகோபுரத்தையே வலுவிழக்க செய்து விடும்.எனவே, ராஜகோபுரத்தின் மீது வளர்ந்துள்ள செடியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.