தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஸ்ரீ பெரியநாயகி சமேத பெருவுடையார் கோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சப்த மாதாக்ககளில் ஒருவர், பாலாதிரிபு சுந்தரியின் போர் தளபதியான வாராஹி அம்மன் தன்னுடைய பக்தர்களின் எதிரிகளை துவம்சம் செய்பவள். எதிரிகளை வீழ்த்தும் வாராஹி தேவிக்கே உரிய விஷேசமே ஆஷாட நவராத்திரி. தஞ்சை பெரியகோயிலில் வாராஹி அம்மனுக்கு இவ்விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் வெவ்வேறு அலங்காரத்தில் வாராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.