பதிவு செய்த நாள்
01
ஜூலை
2022
03:07
மதுரை: விஜய யாத்திரையாக அண்டை மாநிலங்களுக்கு சென்றுள்ள காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தெலுங்கானா மாநில சுற்றுப்பயணத்தை முடித்து, ஆந்திர மாநிலம், பாலசுபடு கிராமத்திற்கு வந்தார். மாநில எல்லையில் பூர்ண கும்ப மரியாதையுடன் அவரை கனகதுர்கா தேவஸ்தான நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், வேத விற்பன்னர்கள் வரவேற்றனர். கிராமத்தில் உள்ள வேணுகோபால சுவாமி மலைக்கோவில் அடிவாரத்தில், காஞ்சி சங்கர மடத்திற்கு பூமி பூஜை நடத்தினார்.பின், நலகொண்டாவில் உள்ள ப்ரகால வரத நரசிம்ம சுவாமி கோசாலைக்கு சென்றார். பின்னர், கோநாடு நகரில் சாதுர்மாஸ்ய விரதத்தின் சிறப்புகள் குறிப்பு பேசினார். சுவாமிகளை ஆந்திர துணை முதல்வர் கோட்டு சத்திய நாராயணா, மாநில அரசின் முதன்மை செயலர் அனில்குமார் சிங்கால், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஹரி ஜவகர்லால் உள்ளிட்டோர் சந்தித்து, மாநில அரசின் சார்பில் நடத்தப்படும் ஆன்மிக பணிகள் குறித்த விளக்கினர்.பின், ஜாகியாபேட்டில் உள்ள காகதீயா சிமென்ட் ஆலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலுக்கு சென்று, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.செப்., 10 வரை ஆந்திராவில் விஜயேந்திரர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.