பதிவு செய்த நாள்
02
ஜூலை
2022
04:07
கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரவளாகத்தில் உள்ள ஏகாட்சர மகா கணபதி கோவிலில் 5-ம்ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி அதிகாலை எஜமானர் சங்கல்பம் நிகழ்ச்சி, விநாயகர் பூஜை , கணபதி ஹோமம், வேதிகா அர்ச்சனை, அக்னிகாரியம், திரவியாஹூதி, வேத ஆகம பாராயணம், பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடந்தது.
பின்னர் 5-ம் ஆண்டு வருஷாபிஷேக கலசாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஏகாட்சர மஹா கணபதிக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு மற்றும் விசேஷ பூஜைகள் நடந்தது. மாலை அலங்கரிக்கப்பட்ட மூஷிகவாகனத்தில் ஏகாட்சரமகாகணபதி எழுந்தருளி கேந்திர வளாகத்துக்குள் வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் கன்னியாகுமரி விவே கானந்தாகேந்திர தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் நிவேதிதா, பொதுச் செயலாளர் பான் உதாஸ், இணை பொதுச்செயலாளர் ரேகாதவே, மூத்த ஆயுட்கால ஊழியர்கள் கிருஷ்ணமூர்த்தி, கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன், கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன், விவேகானந்தர் பாறை நினை வாலய நிர்வாக அதிகாரி தாணு, கேந்திர வளாக பொ றுப்பாளர்கள் சுனில், ராமையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.