பதிவு செய்த நாள்
04
ஜூலை
2022
10:07
காஞ்சிபுரம், வடக்குபட்டு சிவன் சிலை கண்டுபிடிப்பு குறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த, வடக்குப்பட்டு கிராமத்தில், ஆய்வு செய்தோம். இங்கு, அரிய வகை சிவன் சிலை, பழமை வாய்ந்தசெங்கல், பானை ஓடுகள், கல் திட்டை உள்ளிட்ட பொருட்களை காண முடிகிறது.குறிப்பாக, மண்ணில் புதைந்து இருக்கும் அரிய வகை சிவன் சிலையை காண முடிகிறது. சம்மனமிட்டு அமர்ந்த நிலையில் இருக்கும் சிவன் சிலை பார்க்கும் போது, மணல் கலந்த பாறை என, கூறலாம்.
இது, 7 மற்றும், 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என, தொல்லியல் துறையினர் உறுதிபடுத்தி உள்ளனர்.இது தவிர 10ம் நுாற்றாண்டைச்சேர்ந்த லட்சுமி சிலை உள்ளது. தொல்லியல் துறையினர் வடக்குப்பட்டில் நேற்று அகழாய்வு பணிகளை துவக்கி உள்ளனர். வரலாற்று எச்சங்களை மீட்டு, இளையதலைமுறையினர் அறியும் படி காட்சிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.