பதிவு செய்த நாள்
04
ஜூலை
2022
06:07
மாங்காடு:மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவிலில், ௧௦ நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரை அடுத்த மாங்காட்டில், பிரசித்தி பெற்ற வெள்ளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 3,௦௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அருகேயுள்ள வெள்ளீஸ்வரர் மற்றும் வைகுண்ட பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம். இக்கோவிலில் சிவனுக்கு பூஜை செய்தால், கண் குறைபாடுகள் நீங்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உண்டு. நவகிரக தலங்களில், சுக்ரன் பரிகார தலமாக இந்த வெள்ளீஸ்வரர் கோவில் உள்ளது.சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடக்கும். இந்தாண்டு பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் துவங்கி, வரும் 12ம் தேதி வரை, ௧௦ நாட்கள் நடக்கிறது. 9ம் தேதி திருத்தேர் உலா, 12ம் தேதி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.