உத்தரகோசமங்கை கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2022 05:07
உத்தரகோசமங்கை : சைவ சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் ஒன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் சிவபெருமான் குறித்து மனம் உருக பாடிய திருவாசகம் புகழ்பெற்றது. திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்என்பது இதன் பெருமையை கூறும். ஆண்டு தோறும் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் மாணிக்கவாசகரின் குருபூஜை விழா நடக்கிறது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் தனி சன்னதியில் மாணிக்கவாசகர் வீற்றிருக்கிறார். உற்ஸவர் மற்றும் மூலவர் மாணிக்கவாசகருக்கு 16 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. திருவாசகம், பொன்னுாஞ்சல், சிவபுராணம், பாராயணம், நாமாவளி, பஜனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மதியம் அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர், ராமகிருஷ்ண சேவா மந்திர் தலைவர் சிவராம் செய்திருந்தனர்.