பதிவு செய்த நாள்
05
ஜூலை
2022
05:07
ராஜபாளையம் : ராஜபாளையம் அஞ்சல் நாயகி, மாயுர நாத சுவாமி கோயிலில் ஆனி பெருந்திருவிழா கொடியேற்ற த்துடன் தொடங்கியது.சுவாமிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றதை தொடர்ந்து நந்தி, கொடிமரம், பலி பீடத்திற்கு பால், சந்தனம், மஞ்சள், தேன், வாசனை திரவியங்கள் இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.கொடிமரத்திற்கு மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு 7:09 மணிக்கு சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.விழா நாட்களில் கற்பக தரு, காமதேனு, பூத, அன்ன, உள்ளிட்ட வாகனங்களில் உலா வருவார். ஜூலை 9ல் திருக்கல்யாணம், 11ல் தேரோட்டம் நடக்கிறது.
சுவாமி ஊர்வலம்: ராஜபாளையம் அம்பலப்புலி பஜார் கருப்பஞானியார், பொன்னப்ப ஞானியார், கோயிலில் நாகலிங்க தங்க கவச அலங்காரத்தில் சுவாமிகள் வீதி ஊர்வலம் நடந்தது. கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு தண்டியில் சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க சுவாமிகள் வலம் வந்தனர். அன்னதானம் நடந்தது.