உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற சிவாலயம். இங்கு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மரகத நடராஜர் சன்னதி முன்புற மண்டபத்தில் உற்ஸவ மூர்த்தி சிவகாமிசமேத நடராஜருக்கு ஆனித்திருமஞ்சன உற்ஸவ விழா நடந்தது.பால், இளநீர், மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடந்தது.கயிலை வாத்தியம் முழங்கப்பட்டது. பின்னர் காலை 7:00 மணிக்கு உற்ஸவர் மூர்த்திகளின் உள்பிரகார வீதியுலாவிற்கு பின் மங்களேஸ்வரி அம்மன் சன்னதியில் இருப்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டு, பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.உத்தரகோசமங்கையில்ஆண்டிற்கு 6 முறை திருமஞ்சனம் நடப்பது வழக்கம். அவற்றில் மார்கழி ஆருத்ரா அன்றும்,ஆனி மாதத்தில் வரக்கூடிய திருமஞ்சன விழாவும் சிறப்பு வாய்ந்தவை. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.