கிருஷ்ணாபுரம் காந்தாரி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2022 04:07
ரெகுநாதபுரம்: வண்ணாகுண்டு அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள காந்தாரியம்மன் கோயிலில் பூக்குழி உற்சவ விழா நடந்தது. கடந்த ஜூன் 26., அன்று காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று மாலை 6 மணியளவில் கோயில் முன்புறம் உள்ள திடலில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை மூலவர் காந்தாரி அம்மன், சித்தி விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாவிளக்கு, நெய் விளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் எடுத்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கிருஷ்ணாபுரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.