காளஹஸ்தி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2022 10:07
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணைக்கோயிலான விக்ஞான கிரி மலை மீது உள்ள வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழா நாளை ( வெள்ளிக்கிழமை) 8. 7.2022 அன்று நடக்க உள்ள நிலையில் 6.7.2022 புதன்கிழமை அன்று கோயிலில் அங்குரார்ப்பணம் சிறப்பு பூஜையை சிவன் கோயில் வேதப் பண்டிதர்கள் சாஸ்திர பூர்வமாக நடத்தினர் . இன்று 7 .7 .2022 வியாழக்கிழமை அன்று காலை சிகர கலச ஸ்தாபனம் மற்றும் புதிய கொடிமரத்தை புணர் பிரதிஷ்டை போன்ற நிகழ்ச்சிகள் நடத்த உள்ளது. தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி சிவன் கோயில் வேத பண்டிதர்களால் ஆகம விதிப்படி நடக்க உள்ளது. சுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூர்.தாரக சீனிவாசலு விற்கு ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம். எல் .ஏ .மதுசூதன் ரெட்டி அறிவுரையின் பேரில் கோயில் புனரமைக்கும் பணிகள் செய்யப்பட்டதோடு புதிய கொடிமரத்தை ஏற்பாடு செய்தனர். மேலும் கோயில் வளாகத்தில் கிரானைட் கற்களை ஏற்பாடு செய்ததோடு கோயிலில் புதிய சிகர கோபுரம் ஏற்பாடு செய்தனர் . இந்த பணிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை 8.7.2022 அன்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.