அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் செடிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2022 10:07
அவிநாசி, லிங்கேஸ்வரர் கோவிலில் பிரதான ராஜ கோபுரத்தில், பல இடங்களில் அரசமர செடிகள் துளிர்வு. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், முன் வாயிலில் அமைந்துள்ள ஏழு நிலை கிழக்கு ராஜ கோபுரத்தில், சிலைகளுக்கு நடுவே பல இடங்களில் அரச செடிகள் துளிர்வு விட்டுள்ளது.
கொங்கேழு சிவாலயங்களுள் முதன்மையானது. காசியில் வாசி அவிநாசி என்ற போற்றுதலுக்குரியதும் பழமை வாய்ந்ததுமான அருள்மிகு கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேசுவரர் கோவிலுக்கு, கடந்த 1973ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு ஏழு நிலை ராஜ கோபுரம் கட்டப்பட்டது. இந்நிலையில், ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிசேகம் நடைபெற வேண்டும் என்பது சிவ ஆகம விதிகளில் ஒன்றாகும். தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில் கோவிலில் முன் பகுதியில் உள்ள ராஜகோபுரத்தில், நான்கு பகுதிகளிலும் மற்றும் உள் கற்பக கிரஹ பிரகாரத்தில் அமைந்துள்ள கோபுரங்களில் உள்ள | சிலைகள்,அனைவற்றிலும் பெயிண்டுகள் மங்கி சிலைகள் பொளிவிளந்தும், சிலவற்றில் சிலைகள் சேதமடைந்தும் உள்ளது மேலும்,ராஜ கோபுரத்தில் பல இடங்களில் சிலைகளுக்கு நடுவே அரச மர செடிகள் துளிர்வு விட்டுள்ளதால் செடி பெரியதாகி சிலைகளை மேலும் சேதப்படுத்தும் என்றும், கோபுரத்தின் இஸ்திர தன்மை பாதிப்படையும் என்பதால் உடனடியாக மரமாத்து பணிகளை மேற்கொண்டு. விரைந்து கும்பாபிசேகம் நடத்திட பக்தர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.