பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனி பெருவிழா கம்பம் நடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2022 10:07
பெரியகுளம்: கவுமாரியம்மன் கோயில் திருவிழா சாட்டுதலுடன் கம்பம் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஹிந்து அறநிலையைத்துறைற்கு உட்பட்டது. தேனி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற அம்மன் கோயிலாகும். கொரோனாவினால் இரு ஆண்டுகளுக்கு பிறகு ஆனி திருவிழா நடக்கிறது. நேற்று முன்தினம் (ஜூலை 5) இரவு சாட்டுதலுடன் கோயில் முன்புறம் கம்பம் நடப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னதாக வடகரை வரதப்பர் தெருவில் கோயில் பூஜாரி வீட்டிலிருந்து முளைப்பாரி, சக்தி கரகத்துடன் கம்பம் கொண்டுவரப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஜூலை 11 ல் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. தினமும் அம்மன் குதிரை, ரிஷபம்,சிம்மம், அன்னபட்சி, யானை, மின்ஒளி, பூ பல்லாக்கில் வீதி உலா வருவார். முக்கிய திருவிழாவான ஜூலை 19 மாவிளக்கு உற்சவமும் மறுநாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து அம்மனை வழிபடுகின்றனர். ஜூலை 26 ல் மறு பூஜை. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.