மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2022 12:07
மாங்காடு: மாங்காடு, வெள்ளீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவின், 4ம் நாளான நேற்று, புருஷாமிருக வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் சந்திரசேகரர், மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடுடில், பழமை வாய்ந்த வெள்ளீஸ்வரர் கோவில் உள்ளது. மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அருகேயுள்ள வெள்ளீஸ்வரர் மற்றும் வைகுண்ட பெருமாளை வழிப்பட்டு விட்டு செல்வது வழக்கம்.நவகிரஹ ஸ்தலங்களில், சுக்ரன் பரிகார ஸ்தலமாக விளங்கும் வெள்ளீஸ்வரர் கோவிலில், ஜூலை 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை, பத்து நாட்கள் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.இவ்விழாவின், நான்காம் நாளான நேற்று, புருஷாமிருகம் வாகனத்தில் உற்சவர் சந்திரசேகர் அருளி, மாடவீதிகள் வழியாக உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.