வேலப்பர் கோயில் சுவர்களில் சுத்தம் செய்யும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2022 03:07
ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிய நிலையில் கோயில் சுவர்களில் படிந்துள்ள கறைகளை நீர் மூலம் சுத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலைப்பர் கோயில். மருத மரங்களின் வேர் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை நீர் கோயிலின் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியில் விழா நடைபெறும். மாதாந்திர கார்த்திகை, பௌர்ணமி, அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து 20 ஆண்டுக்கும் மேல் ஆகிறது. கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து ஜூன் 10 ல் கும்பாபிஷேகத்திற்கான பாலலய பணிகள் கணபதி ஹோமத்துடன் நடந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது கோயில் கருவறை மற்றும் சுவர்களில் படிந்துள்ள கறைகளை தண்ணீர் மூலம் அகற்றும் பணி துவங்கி உள்ளது. கும்பாபிஷேகம் நடத்துவதற்கான அடுத்தடுத்த பணிகள் ஹிந்து அறநிலையத்துறை மேற்பார்வையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.