பதிவு செய்த நாள்
07
ஜூலை
2022
03:07
மேட்டுப்பாளையம்: ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, மனோன்மணி அம்மனுக்கு, 16 வகையான வாசனை திரவியங்களில் சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் நடந்தது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இங்கு வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகள் உள்ளன. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து உச்சவர் சுவாமி சிலைகளுக்கு மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், தேன், பால், தயிர், பன்னீர் என, 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு விட்டனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.