பதிவு செய்த நாள்
08
ஜூலை
2022
04:07
ஆனைமலை : ஆனைமலை, தாத்துாரில், பிரசித்தி பெற்ற விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று, 17வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலை, 8:30 மணிக்கு ஆபரணப்பெட்டி எடுத்து வருதல், 9:00 மணிக்கு ஹோம பூஜைகள், 11:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மதியம், 12:00 மணிக்கு மஹா தீபாராதனை முடித்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:30 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. அதன்பின், 6:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.