கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் பூஜை நடந்தது.காலை 8 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி புண்யாகவாசனம்,தேவதா அனுக்கை, யாகசாலை பூஜை, மஹா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது.பின்பு முத்துமாரியம்மனுக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள், பன்னீர், பால் உட்பட 21 வகையான அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது.டிரஸ்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.கமுதி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.